இயற்கை, பௌதீக, ஆளணிவளங்களைமேம்படுத்தல்
மனித அடிப்படைத் தேவைகளில் முக்கியமானவையான நிரந்தர வதிவிடம், சொந்தக் காணி இல்லாதிருப்பவர்களை இனங்கண்டு வீட்டுத்திட்டம் பெற்றுக் கொடுக்கப்படும். வின்றி அமையாது உலகு” என்ற வாக்கிற்கிணங்க ‘அனைவருக்கும் குடிநீர் என்ற செயற்திட்டத்தினை உருவாக்கி குடிநீர் அற்ற கிராமங்களுக்கு குழாய் மூலம் இணைப்புகளும் உருவாக்கப்படும். மேலும் ‘இருள் அகன்றிய தேசம் எனும் தொனிப்பொருளில் அனைத்துக் கிராமங்களுக்கும் மின்சார வசதிகளை ஏற்படுத்தித் தெருவுக்குத் ரு வீதி விளக்குகள் ஒளிர்வதும் உறுதி செய்யப்படும். அவிருத்தி இடைவெளியை நிரப்பி, நிறைவான கிராமங்களை உருவாக்கும் நோக்கில் […]
மேலும் பார்க்கஅறிவுபூர்வமான, சக்திமிக்கமகளிர், இளைஞர்களின்எதிர்காலம்
இன்றைய இளைஞர்களிடத்தில் காணப்படும் ஆக்கபூர்வமான விடயங்களோடு ஆற்றல், நிறமைகளை இணைத்து எதிர் மறை எண்ணங்களை மறைத்து, புதிய தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொள்வேன். வேலையற்ற இளைஞர், யுவதிகளுக்குத் தொழில்நுட்பக் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்களுக்கூடாக அவர்களின் திறனாற்றல் விருத்தியை ஏற்படுத்தி வேலைவாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுப்பேன். இதனால் அவர்கள் சிறந்த எதிர்காலத்தை நோக்கி வழிப்படுத்தப்படுவதுடன் குறிப்பாக போதையற்ற, வன்முறையற்ற இளம் சமுதாயம் மீளுருவாக்கம் செய்யப்படும். கிராமிய ரீதியில் மாதர் சங்கங்களுடன் இணைந்து பெண்களுக்கான சிறப்புக் குழுக்களை […]
மேலும் பார்க்கதொழில்நுட்பத்தைமையப்படுத்தியசமூகமொன்றைக்கட்டியெழுப்புதல்
தொழில்நுட்பத்தினால் உலகமும், பல்வேறு நாடுகளும், சமூகங்களும் அடைந்த துரித வளர்ச்சியை நேரில் பார்த்தவன் நான். தொழில்நுட்பம் எமது சமூகத்தில் ஏற்படுத்தக்கூடிய காத்திரமானதும், ஆக்கபூர்வமானதுமான பங்களிப்பை ஆழமாகப் புரிந்துகொண்டவன் என்ற ரீதியில், தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி ஒவ்வொரு தனிமனிதனதும், சமூகத்தினதும் வினைத்திறனை அதிகரிக்க “டிஜிட்டல்-யாழ்” (digital-yarl) என்ற திட்டத்தினூடாகப் பின்வரும் செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளேன். “டிஜிட்டல் ஆளுகை” (digital governance) திட்டத்தினூடாக அரச நிறுவனங்கள், திணைக்களங்கள். பாடசாலைகள் மற்றும் இதர அலுவகங்களில் நடைபெறும் நாளாந்த அலுவல்கள். படிமுறைகள் செயற்பாடுகளை கணனிமயப்படுத்துவதற்கான […]
மேலும் பார்க்கஉடல், உளநலன்மிக்கஆரோக்கியமானசமூகத்தைஉருவாக்கல்
-நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற கூற்றிற்கமைய அதிகரித்து வரும் உடல் சார் நோய்களைக் கட்டுப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நோக்கில் பொது உடற்பயிற்சி நிலையங்கள். பூங்காக்கள் அமைப்பதனூடாக உடற்பயிற்சியினை ஊக்குவிப்பேன். இலங்கையில் ஏனைய இடங்களுடன் ஒப்பிடுகையில் யாழ்.கிளிநொச்சி மாவட்டப் பெண்கள் உடற்பயிற்சி சார் செயற்பாடுகளில் ஈடுபடுவது குறைவாகவே காணப்படுகிறது. ஆகவே பெண்களுக்காக தனியான உடற்பயிற்சி நிலையங்களை அமைக்க வழிகோலுவேன். டெங்கு ஒழிப்புச் செயற்திட்டங்களைப் பன்முகப்படுத்தி யாழ், கிளிநொச்சி மாவட்டங்களில் டெங்கு நோயை இல்லாதொழித்து இலங்கையில் […]
மேலும் பார்க்கஅனைத்துதமிழ்உறவுகளையும்ஒரேபுள்ளியில்இணைத்தல்
இந்து சமுத்திரத்தின் கண்ணீர்த் துளியான இலங்கையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்கள் தனிச் சிறப்பம்சங்களைக் கொண்ட தனித் தாரகையாகத் திகழ்கின்றது. கலைக்குப் புகழ் பெற்ற தமிழன், அதற்குப் புகழ் கொடுத்த மண் இந்த மண், உலகம் முழுதும் பரந்து வாழும் தமிழ் மக்களை இம் மண்ணுடன் ஒன்றிணைக்கும் விசேட திட்டங்களை உருவாக்கி அமுல்படுத்துவேன். குறிப்பாகப் புலம்பெயர் உறவுகளையும், தமிழ் நாட்டிலுள்ள தமிழர்களையும் தாயகத்துடன் இணைக்கும் இணைப்புப்பாலத்தை நவீன தொழில்நுட்ப வசதிகளுக்கூடாக செயல் வடிவம் பெறச்செய்வேன். எம் மக்களுக்குப் பல […]
மேலும் பார்க்கமொழி, கலை, கலாச்சார, பண்பாட்டு, இலக்கியப்புத்தாக்கம்
ஒரு சமூகத்தின் மொழி, கலை, கலாச்சாரம், இலக்கியம், பண்பாடு என்பவை மண்வாசனையோடு தொடர்புபட்டு அச்சமூகத்தின் அடையாளத்தைப் பிதிபலிப்பவை. எமது கிராமங்களில் பிரபல்யமாயிருந்து தற்போது மறைந்து போய்க் கொண்டிருக்கும் கலாச்சாரப் பண்பாட்டு நிகழ்வுகள் மீள் எழுச்சியுற வழி வகுக்கப்பட்டு, நலிவடைந்த கலைஞர்கள் கௌரவிக்கப்படுவதுடன். அவர்களின் வாழ்வாதாரம் மேம்படப் பாடுபடுவேன். மொழியை உயிராய் மதிப்பவர்களே தமிழர்கள். அரச அலுவலகங்கள். நிர்வாகக் காரியாலயங்களில் தமிழ் மொழியின் இருப்பை 100% உறுதிப்படுத்துவேன். குறிப்பாக யாழ். கிளிநொச்சி மாவட்டங்களின் பெயர்ப் பலகைகளில் தமிழ் மொழிக்கு […]
மேலும் பார்க்கவிவசாயம், மீன்பிடி. கால்நடைத்துறைகளில்துரிதமீளெழுச்சி
விவசாயமே எமது மக்களின் பொருளாதாரப் பலத்தின் முதுகெலும்பாகத் திகழ்கின்றது. ஏறத்தாழ 40% மக்கள் விவசாயத்தை ஜீவனோபாயமாகக் கொண்டவர்கள். அதனால் விவசாய மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுடன், உணவுப் பாதுகாப்பினை எய்துதல், உற்பத்தி மேம்பாட்டினூடாக இலாபகரமானதும், நீடித்து நிலைத்திருக்கக்கூடியதுமான உணவு உற்பத்தியை அதிகரித்து விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கலுக்கு முக்கியத்துவம் கொடுப்பது மிகவும் அவசியமாகின்றது. தொழில்நுட்பத்தை உச்ச அளவில் பயன்படுத்தி, விவசாயத் துறையில் ஒரு மறு மலர்ச்சியினை ஏற்படுத்துவதன் மூலமே இதனைச் சாதிக்க முடியும். இதனை நடைமுறைச் சாத்தியமாக்குவதற்கு விவசாயத் தொழில்மயமாக்கல் […]
மேலும் பார்க்கதுரிதபொருளாதாரவளர்ச்சி
மூன்று தசாப்த காலப் போருக்குப் பின்னர் சமூகப் பொருளாதார சவால்கள், அழிவடைந்த, அபிவிருத்தியடையாத உட்கட்டமைப்பு. சிதைவடைந்து போன சமூக நிறுவனங்கள் நாட்டின் எஞ்சிய பகுதிகளுடன் ஒப்பிடுகையில் பின்தங்கியுள்ளது. போருக்குப் பின்னரான மீள்கட்டுமான உபாயமானது கட்டடவாக்க உட்கட்டமைப்பு, சுயதொழில் வாய்ப்பினை ஊக்குவிப்பதற்கான கொடுகடன் விரிவாக்கம். தனியார் துறை முதலீட்டினை ஊக்குவித்தல் என்பனவற்றை மையப்படுத்தியிருந்த போதும், வலுவான நீடித்த பொருளாதார வளர்ச்சி, தொழில்நிலை. அதிகரித்த வீட்டலகுகளின் வருமானங்கள் என்பனவற்றை வழங்குவதில் எதிர்பார்ப்புக்கள் பூர்த்தி செய்யப்படவில்லை. வடக்கில் ஒரு பொருளாதார மறுமலர்ச்சியினை […]
மேலும் பார்க்கமீண்டும்கல்வியில்முதலிடம்
தமிழ் மக்களின் ஒரு பெரும் செல்வமாகவும், மூலதனமாகவும், அழியாச்சொத்தாகவும் இருப்பது கல்வி. எத்தனை இடர்கள் வந்தபோதிலும் கல்வியை எமது மக்கள் கைவிட்டதில்லை. ஆனால், வட மாகாணம் இன்று கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலைக்குச் சென்று விட்டதை புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டுகின்றன. நன்கு திட்டமிட்ட காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தை எமது புத்திஜீவிகள் வலியுறுத்தி இருக்கிறார்கள். இது தொடர்பில் பலருடனும் நான் கலந்துரையாடி எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று ஆராய்ந்து வருகின்றேன் . கல்விப் பொதுத் தராதர சாதாரணதர […]
மேலும் பார்க்க