விவசாயமே எமது மக்களின் பொருளாதாரப் பலத்தின் முதுகெலும்பாகத் திகழ்கின்றது. ஏறத்தாழ 40% மக்கள் விவசாயத்தை ஜீவனோபாயமாகக் கொண்டவர்கள். அதனால் விவசாய மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுடன், உணவுப் பாதுகாப்பினை எய்துதல், உற்பத்தி மேம்பாட்டினூடாக இலாபகரமானதும், நீடித்து நிலைத்திருக்கக்கூடியதுமான உணவு உற்பத்தியை அதிகரித்து விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கலுக்கு முக்கியத்துவம் கொடுப்பது மிகவும் அவசியமாகின்றது.
தொழில்நுட்பத்தை உச்ச அளவில் பயன்படுத்தி, விவசாயத் துறையில் ஒரு மறு மலர்ச்சியினை ஏற்படுத்துவதன் மூலமே இதனைச் சாதிக்க முடியும். இதனை நடைமுறைச் சாத்தியமாக்குவதற்கு விவசாயத் தொழில்மயமாக்கல் (Agri Industrialization) திட்டத்தின் கீழ் எம் விவசாயிகளை ஒருங்கிணைத்து, உணவு உற்பத்திக்கான நவீன முறைமைகளைப் பயன்படுத்தி விவசாய தொழில்நுட்ப அபிவிருத்திக் கண்டுபிடிப்புக்களை ஊக்குவித்து, நவீன விவசாய இயந்திரங்களைப் பயன்படுத்தி உணவு உற்பத்தி, பெறுமதி சேர்த்தல், களஞ்சியப்படுத்துதல், சந்தைப்படுத்தல் ஆகியவற்றில் புதிய முறைமைகளும் அறிமுகப்படுத்தப்படும்.
ஸ்மார்ட். டிஜிட்டல் விவசாயம் என்பது தரம், அளவு ஆகியவற்றை அதிகரிக்கும் பொருட்டு நவீன, துல்லிய தொழில்நுட்பங்களான இன்டர்நெட், GPS, மண் சோதனை, தகவல் முகாமைத்துவம் ஆகியவற்றைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பண்ணை முகாமைத்துவமாகும்.
விவசாயத் துறை எந்தளவுக்கு எமது மக்களின் பொருளாதாரத்துக்கு முக்கியத்துவம் மிக்கதாக இருக்கின்றதோ அந்தளவுக்கு மீன்பிடித்துறையும் முக்கியமானது. மீன்பிடித்துறையில் பாரியளவில் அபிவிருத்தி நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளவேண்டி இருக்கின்றது. இதுதொடர்பில், அரசாங்கம், வங்கிகள். மீனவர் கூட்டுறவுச் சங்கங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து “நீலப்புரட்சி’ திட்டம் ஒன்றை முன்மொழிந்து, அமுல்படுத்த நடவடிக்கை எடுப்பேன்.
கால்நடை பண்ணை வளர்ப்புத் தொழில்துறை கணிசமான அளவுக்கு மக்களின் வாழ்வாதாரத் தொழிலாகக் காணப்படுகின்றது. கால்நடை உற்பத்திப் பொருட்களுக்கான கேள்வியும் உள்ளூர் சந்தைகளிலும், வெளிநாட்டுச் சந்தைகளிலும் தொடர்ந்தும் அதிகரித்துவரும் நிலையில் நிதி. சமூக, தொழில்நுட்ப. சுற்றாடல் சார்ந்த காரணிகளைக் கவனத்தில் கொண்ட உபாயங்களின் ஊடாக எமது மக்களின் வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளுக்கான முக்கியமான ஒரு திறவுகோலாக நாம் இதனைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
- உணவுஉற்பத்தியும், பாதுகாப்பும்
- விவசாயத்தொழில்மயமாக்கம்
- ஸ்மார்ட். டிஜிட்டல்விவசாயம்
- நீலப்புரட்சி
- விவசாயதொழில்முனைவோர்களைஉருவாக்கல்
- நிலையானவிவசாயச்சுற்றுச்சூழல்அமைப்பு