ஒரு சமூகத்தின் மொழி, கலை, கலாச்சாரம், இலக்கியம், பண்பாடு என்பவை மண்வாசனையோடு தொடர்புபட்டு அச்சமூகத்தின் அடையாளத்தைப் பிதிபலிப்பவை. எமது கிராமங்களில் பிரபல்யமாயிருந்து தற்போது மறைந்து போய்க் கொண்டிருக்கும் கலாச்சாரப் பண்பாட்டு நிகழ்வுகள் மீள் எழுச்சியுற வழி வகுக்கப்பட்டு, நலிவடைந்த கலைஞர்கள் கௌரவிக்கப்படுவதுடன். அவர்களின் வாழ்வாதாரம் மேம்படப் பாடுபடுவேன். மொழியை உயிராய் மதிப்பவர்களே தமிழர்கள். அரச அலுவலகங்கள். நிர்வாகக் காரியாலயங்களில் தமிழ் மொழியின் இருப்பை 100% உறுதிப்படுத்துவேன். குறிப்பாக யாழ். கிளிநொச்சி மாவட்டங்களின் பெயர்ப் பலகைகளில் தமிழ் மொழிக்கு முதலிடம் ஒதுக்கப்படும். ஆரம்பக் கல்வியிலிருந்தே மாணவர்களுக்கு மொழி வளர்ச்சியை ஏற்படுத்த அனைத்துப் பாடசாலைகளிலும் தமிழ், ஆங்கில ஆசிரியர்கள் இருப்பதை உறுதி செய்வேன். முன்னாள், இந்நாள் தமிழ் இலக்கியவாதிகளின் ஆவணங்கள் கோவையாக்கப்படும். தமிழ் கலாச்சார தொல்பொருள் வரலாற்று ஆவணங்கள். சின்னங்கள் பாதுகாக்கப்படுவதுடன் தொன்மையான ஆலயங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாயிருப்பேன்.
மனித இனம் எப்படி வாழ வேண்டும் என்பதனை விட எப்படி வாழக்கூடாது என்று வாழ்வியலைக் கற்றுக் கொடுத்தது தமிழரின் பண்பாட்டு அடிச்சுவடுகள். இவ்வாறிருக்க வன்முறைகளைத் தூண்டி மக்களின் அமைதியான வாழ்வைச் சீர் குலைக்கும் நடவடிக்கைகள் தற்காலத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அனைத்து வன்முறையாளர்களையும், குழுக்களையும் யாழ் மண்ணிலிருந்து அடியோடு இல்லொதொழிக்கும் வகையில் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு பொது மக்களின் ஸ்திரமான வாழ்வினை உறுதி செய்யப் போராடுவேன். போதைப்பொருட்கள் யாழ் குடா நாட்டுக்குள் கொண்டு வரப்படும் வழிவகைகளைக் கண்டறிந்து அதனைத் தடுக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வேன். அதிகரித்து வரும் குடும்ப வன்முறைகள், பெண்கள், சிறுவர் துஸ்பிரயோகங்களைத் தடுப்பதற்காகக் கிராமிய ரீதியில் சிறப்புக் குழுக்கள் உருவாக்கப்பட்டுப் பொருத்தமான ஆலோசனைகள் வழங்கப்படுவதனூடாக ஏற்பட இருக்கும் சமூக சீர்கேடுகளைத் தடுக்க முன்கூட்டியே நடவடிக்கை எடுப்பேன்.
- வழக்கொழிந்தபாரம்பரியக்கலைகள்மீளுருவாக்கம்
- உலகின்மூத்தமொழி. செம்மொழியானதமிழ்மொழிவிருத்தி
- வன்முறையற்றசமுதாயம்
- போதையற்றசமுதாயம்
- தமிழ்இலக்கியவட்டவிருத்தி
- தமிழ்க்கலாச்சாரத்தொல்பொருள்வரலாற்றுச்சின்னங்களைப்பாதுகாத்தல்