தமிழ் மக்களின் ஒரு பெரும் செல்வமாகவும், மூலதனமாகவும், அழியாச்சொத்தாகவும் இருப்பது கல்வி. எத்தனை இடர்கள் வந்தபோதிலும் கல்வியை எமது மக்கள் கைவிட்டதில்லை. ஆனால், வட மாகாணம் இன்று கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலைக்குச் சென்று விட்டதை புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டுகின்றன. நன்கு திட்டமிட்ட காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தை எமது புத்திஜீவிகள் வலியுறுத்தி இருக்கிறார்கள். இது தொடர்பில் பலருடனும் நான் கலந்துரையாடி எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று ஆராய்ந்து வருகின்றேன் .
கல்விப் பொதுத் தராதர சாதாரணதர மற்றும் உயர்தர மாணவர்களின் பெறுபேறுகள் முன்னைய காலத்துடன் ஒப்பிடும்பொழுது பெரும் வீழ்ச்சி கண்டுள்ளன. குடும்ப வறுமை, பெற்றோரின் கவனக்குறைவு. போதிய விழிப்புணர்வின்மை உட்படப் பல்வேறு காரணங்கள் இதற்கு முன்வைக்கப்பட்டுள்ளன. இவற்றை நிவர்த்திப்பதற்கான பொருத்தமான திட்டங்களை நான் மேற்கொண்டு வருகின்றேன். குறிப்பாக வறுமை காரணமாக பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தியுள்ள மாணவர்கள் பற்றிய தகவல்களைச் சேகரித்து அவர்களுக்கான கற்றல் உபகரணங்களை தொடர்ச்சியாக வழங்குவதற்கான திட்டம் ஒன்றையும், அவர்களுக்கான காலை உணவு வழங்குவதற்கும் அரசாங்கத்தின் மூலம் நான் நடவடிக்கை எடுக்க இருக்கின்றேன்.
மாணவர்களின் பாடசாலை வரவு, இடைவிலகல் மற்றும் அடைவு மட்டமானது சீர்செய்யப்பட்டு, விஞ்ஞான, ஆங்கிலக் கற்பித்தல் தரத்தை உயர்த்துவதற்கு ஆவன செய்வேன் என்று உறுதி கூறுவதுடன் நகர்ப்புறப் பாடசாலைகளுக்கும் கிராமப்புற பாடசாலைகளுக்கும் இடையில் காணப்படும் உட்கட்டமைப்பு ஆளணி ரீதியான சமத்துவம் இன்மையைச் சீர் செய்வதற்கும் பல்கலைக்கழகம் செல்ல முடியாத மாணவர்கள் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் எதிர்காலத்தில் வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் சர்வதேச தரத்திலான திறன் விருத்தி சார் தொழிற்கல்வி நெறிகளை அறிமுகப்படுத்துவதற்கும் அரசாங்கத்தின் ஊடாக நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன்.
- தரமானமாணவர்மையக்கல்விமுறைமை
- நவீனதொழில்நுட்பத்தினூடாகபாடசாலைக்கல்வியின்புத்தெழுச்சி
- திறன்விருத்திசார்தொழிற்கல்விஅறிமுகம்
- கல்விசார்பௌதீக. ஆளணிவளங்களின்இடைவெளியைநிரப்பல்
- இணைப்பாடவிதானசெயற்பாடுகளுக்குமுன்னுரிமை
- சமூகப்பொறுப்புள்ளமாணவர்களைஉருவாக்கல்