தொழில்நுட்பத்தினால் உலகமும், பல்வேறு நாடுகளும், சமூகங்களும் அடைந்த துரித வளர்ச்சியை நேரில் பார்த்தவன் நான். தொழில்நுட்பம் எமது சமூகத்தில் ஏற்படுத்தக்கூடிய காத்திரமானதும், ஆக்கபூர்வமானதுமான பங்களிப்பை ஆழமாகப் புரிந்துகொண்டவன் என்ற ரீதியில், தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி ஒவ்வொரு தனிமனிதனதும், சமூகத்தினதும் வினைத்திறனை அதிகரிக்க “டிஜிட்டல்-யாழ்” (digital-yarl) என்ற திட்டத்தினூடாகப் பின்வரும் செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளேன்.
“டிஜிட்டல் ஆளுகை” (digital governance) திட்டத்தினூடாக அரச நிறுவனங்கள், திணைக்களங்கள். பாடசாலைகள் மற்றும் இதர அலுவகங்களில் நடைபெறும் நாளாந்த அலுவல்கள். படிமுறைகள் செயற்பாடுகளை கணனிமயப்படுத்துவதற்கான பிரேரணை ஒன்றைச் சமர்ப்பித்து அதனை செயல்படுத்துவேன். அத்தியாவசியச் சேவைகளான கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்ற துறைகளிலுள்ள நடைமுறைச் சிக்கல்களை இலகுவாக்க இலத்திரனியல்-சேவை (e-service) முறைகளை நடைமுறைப்படுத்துவேன். பணப்பரிமாற்றம், கொடுக்கல் வாங்கல்களின் வினைத்திறனை அதிகரிப்பதற்கும். இலகுபடுத்துவதற்கும் இலத்திரனியல்-கட்டணம் (e-payment) முறைமையை அறிமுகப்படுத்துவேன். மேலும் எமது பொருளாதாரத்தை துரித வளர்ச்சிப் பாதையில் இட்டுசெல்லும் பொருட்டு உள்ளூர் தொழில்முனைவோர்களை உருவாக்குவதற்கு “ஸ்டார்ட் அப் யாழ்” (startup-yarl) என்ற திட்டத்தையும், யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள் தொடர்பான தரவுகளை ஆவணப்படுத்துவதற்கு இலத்திரனியல்-தரவுத்தளம் ஒன்றினை -digital-database” என்ற திட்டத்தினூடாகச் செயற்படுத்துவேன்.
- டிஜிட்டல்சேவைகள் (Digital Services)
- டிஜிட்டல்தரவுத்தளம் (Digital Knowledge Base)
- டிஜிட்டல்வேலைவாய்ப்புவங்கி (Digital Job Bank)
- டிஜிட்டல்கட்டணம் (Digital Payment)
- டிஜிட்டல்ஆளுகை (Digital Governance)
- ஸ்டார்ட்அப்யாழ் (Startup Yarl)