மூன்று தசாப்த காலப் போருக்குப் பின்னர் சமூகப் பொருளாதார சவால்கள், அழிவடைந்த, அபிவிருத்தியடையாத உட்கட்டமைப்பு. சிதைவடைந்து போன சமூக நிறுவனங்கள் நாட்டின் எஞ்சிய பகுதிகளுடன் ஒப்பிடுகையில் பின்தங்கியுள்ளது. போருக்குப் பின்னரான மீள்கட்டுமான உபாயமானது கட்டடவாக்க உட்கட்டமைப்பு, சுயதொழில் வாய்ப்பினை ஊக்குவிப்பதற்கான கொடுகடன் விரிவாக்கம். தனியார் துறை முதலீட்டினை ஊக்குவித்தல் என்பனவற்றை மையப்படுத்தியிருந்த போதும், வலுவான நீடித்த பொருளாதார வளர்ச்சி, தொழில்நிலை. அதிகரித்த வீட்டலகுகளின் வருமானங்கள் என்பனவற்றை வழங்குவதில் எதிர்பார்ப்புக்கள் பூர்த்தி செய்யப்படவில்லை.
வடக்கில் ஒரு பொருளாதார மறுமலர்ச்சியினை ஏற்படுத்துவதற்கான ஏராளமான பௌதிக வளங்களும், மனித வளங்களும் இருக்கின்றன. உரிய முன்மொழிவுகளை முன்வைத்து அரசாங்கத்திடம் அவற்றுக்கான நிதியைப் பெற்று பாரிய, நடுத்தர மற்றும் சிறிய அளவிலான கைத்தொழில் முயற்சிகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவம் செய்த தமிழ் அரசியல்வாதிகள் தவறிவிட்டார்கள். அரசாங்கம் தானே எல்லாவற்றையும் முன்வந்து செய்யும் என்று இருந்துவிட முடியாது. நாம் தான் திட்டங்களை வகுத்து, அமைச்சரவையில் சமர்ப்பித்து நிதியைப் பெற்றுக்கொள்ளும் பிரயத்தனங்களை மேற்கொள்ள வேண்டும். என்னால் இதனை திறம்பட செய்ய முடியும். யாழ், கிளிநொச்சி மாவட்டங்களில் உள்நாட்டுத் தயாரிப்புக்கள் மற்றும் சேவைகளை ஊக்குவிப்பதற்கு “MAKE IN JAFFNA” என்ற தொனிப்பொருளில் செயற்றிட்டம் ஒன்றைச் செயற்படுத்தவுள்ளேன். வடக்கில் பாரிய முதலீடுகளைக் கொண்டுவரும் நோக்கில் “தாயகத்தை வளமாக்குவோம்” என்ற தொனிப்பொருளில் தென் இலங்கையிலும், இந்தியாவிலும், புலம் பெயர் நாடுகள் மத்தியிலும் மாநாடுகள் மற்றும் சந்திப்புக்களை நடத்தவிருக்கிறேன். கடந்த காலங்களில் வடக்கில் பலர் முதலீடுகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்களை நான் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறேன். மேலும், பின்வரும் செயற்திட்டங்களின் விழிப்புணர்வு மற்றும் நடைமுறைப்படுத்தல் மூலமாக யாழ், கிளிநொச்சி மாவட்டப் பொருளாதாரத்தில் காத்திரமான பங்களிப்பைச் செலுத்துவேன்.
- ‘MAKE IN JAFFNA’ செயற்திட்டம்
- தற்சார்புபொருளாதாரம்
- சிறியமற்றும்நடுத்தரவியாபாரங்களைவலுவூட்டல்
- “தாயகத்தைவளமாக்குவோம்” முதலீட்டுத்திட்டம்
- உற்பத்தி, ஏற்றுமதிப்பொருளாதாரத்திற்குமுன்னுரிமை
- துரிதசுற்றுலாத்துறையின்வளர்ச்சி