-நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற கூற்றிற்கமைய அதிகரித்து வரும் உடல் சார் நோய்களைக் கட்டுப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நோக்கில் பொது உடற்பயிற்சி நிலையங்கள். பூங்காக்கள் அமைப்பதனூடாக உடற்பயிற்சியினை ஊக்குவிப்பேன். இலங்கையில் ஏனைய இடங்களுடன் ஒப்பிடுகையில் யாழ்.கிளிநொச்சி மாவட்டப் பெண்கள் உடற்பயிற்சி சார் செயற்பாடுகளில் ஈடுபடுவது குறைவாகவே காணப்படுகிறது. ஆகவே பெண்களுக்காக தனியான உடற்பயிற்சி நிலையங்களை அமைக்க வழிகோலுவேன்.
டெங்கு ஒழிப்புச் செயற்திட்டங்களைப் பன்முகப்படுத்தி யாழ், கிளிநொச்சி மாவட்டங்களில் டெங்கு நோயை இல்லாதொழித்து இலங்கையில் முன்மாதிரியான மாவட்டங்களாகத் திகழ வழிகோலுவேன். கொரோனா போன்ற வைரசுகள் பரவலைத் தடுப்பதற்காக யாழ்.கிளிநொச்சி மாவட்டச் சுகாதார சேவையினருடன் இணைந்து செயற்படுவேன் கோவிட் 19 தாக்கத்தின் பின்னர் தற்சார்பு பொருளாதாரம், கிராமிய பொருளாதாரம் ஆகியவற்றை மேம்படுத்தும் அவசியம் வலியுறுத்தப்படுகிறது. இதனை அடையும் பொருட்டு உரிய விழிப்புணர்வு, பயிற்சிகள், இலகு கடன் வசதிகள், உர மானியச் சலுகைகள் ஆகியவற்றை ஏற்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.
இயற்கை விவசாயச் செய்கையினை ஊக்குவிப்பதற்காக இயற்கைக் கிருமிநாசினிகள், சேதனப் பசளைகளை இலகுவாகவாகவும், மானிய அடிப்படையிலும் கிடைப்பது உறுதிப்படுத்தப்படும். அரச மருத்துவமனைகள் அனைத்தும் போதிய நவீன வசதிகளுடன் செயற்படுவது உறுதிப்படுத்தப்படுவதுடன் மக்களுக்கு இலவச மருத்துவச் சேவைகள் செவ்வனே சென்றடைவது உறுதி செய்யப்படும். வைத்தியர். தாதியர் பற்றாக்குறை காணப்படும் வைத்தியசாலைகளை இனங்கண்டு பொருத்தமான நியமனங்கள் துரிதமாக மேற்கொள்ளப்படுவதனூடாகச் சர்க்கரை வியாதி. குழந்தைப்பேறின்மை. புற்றுநோய் போன்ற முக்கிய மருத்துவத் தேவைகளுக்கான சிகிச்சை வசதிகளை யாழ்,கிளிநொச்சி மாவட்டங்களிலேயே பெற்றுக்கொள்ள வழிவகை செய்வேன். கேரள மாநிலத்தின் முன்மாதிரியைப் பின்பற்றி யாழ்,கிளிநொச்சி மாவட்டங்களில் தனித்துவமான சித்த ஆயுர்வேத வைத்தியத் துறையை விரிவாக்குவேன்.
- நோயெதிர்ப்பாற்றல்மிக்கபிரஜைகள்
- ஆரோக்கியமானசமூகம்
- நஞ்சில்லாஉணவுஉற்பத்தி
- சித்தஆயுர்வேதமருத்துவம்
- தன்னிறைவுஆங்கிலமருத்துவம்
- கொரோனாவிற்குப்பின்னரானவாழ்வு (Post COVID-19 Life)