மனித அடிப்படைத் தேவைகளில் முக்கியமானவையான நிரந்தர வதிவிடம், சொந்தக் காணி இல்லாதிருப்பவர்களை இனங்கண்டு வீட்டுத்திட்டம் பெற்றுக் கொடுக்கப்படும். வின்றி அமையாது உலகு” என்ற வாக்கிற்கிணங்க ‘அனைவருக்கும் குடிநீர் என்ற செயற்திட்டத்தினை உருவாக்கி குடிநீர் அற்ற கிராமங்களுக்கு குழாய் மூலம் இணைப்புகளும் உருவாக்கப்படும். மேலும் ‘இருள் அகன்றிய தேசம் எனும் தொனிப்பொருளில் அனைத்துக் கிராமங்களுக்கும் மின்சார வசதிகளை ஏற்படுத்தித் தெருவுக்குத் ரு வீதி விளக்குகள் ஒளிர்வதும் உறுதி செய்யப்படும்.
அவிருத்தி இடைவெளியை நிரப்பி, நிறைவான கிராமங்களை உருவாக்கும் நோக்கில் குன்றும் குழியுமாகக் காணப்படும் வீதிகள் புனரமைக்கப்பட்டு நீண்ட, அகலமான. சம்பாடான வீதி விஸ்தீரணத்துடன், அனைவருக்கும் சமமான பொதுப் போக்குவரத்து வசதிகள் கிடைக்க வழி சமைப்பேன். இதனூடாகக் கிராமத்திலிருந்து நகரம் வரையான றவுகளின் தொடர்புகள் பலப்படுத்தப்படும். சனசமூக நிலைய வாசிகசாலைகளுக்கும், முன்பள்ளிகளுக்கும் புதிய உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் எடுப்பேன். கல்வியில் அனைவருக்கும் சமமான வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்காக அனைத்துப் பாடசாலைகளுக்கும் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடனான சமமான பாடப்பகிர்வுகள் எதிர்வரும் 5 வருட காலத்திற்குள் செயற்படுத்துவேன்.
இயற்கை வளங்களின் பயன்பாட்டினை நிலைத்திருக்கக் கூடிய வகையில் மேற்பார்வை செய்தல். திட்டமிடல், பயன்பாடு, சூழல் பாதுகாப்பு முதலான இயற்கை வள காமைத்துவத்திற்காக மாவட்ட மட்டக் குழுக்களை அமைப்பேன். அதே வேளை மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி வளத்தை மேம்படுத்தி மின்சாரம், எரிசக்தி, நீர்வழங்கலை உறுச்சூழலுக்கு இசைவாகப் பேண்தகு முறையில் கிடைக்க உறுதி செய்வேன். மேலும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதுடன் உள்ளூர் மக்களின் பொருளாதாரத்தை ம்படுத்தக்கூடிய சூழலியல் சுற்றுலாத்துறையினை அறிமுகம் செய்யவும் நடவடிக்கை எடுப்பேன்.
- நிறைவானகிராமஅபிவிருத்தி
- அனைவருக்கும்வீடு, குடிநீர், மின்சாரம்
- சூழலியல்சுற்றுலாத்துறையின்அறிமுகம்
- பேண்தகுசூழல்முகாமைத்துவம்
- அபிவிருத்திஇடைவெளியைநிரப்பல்
- மீள்புதுப்பிக்கத்தக்கவளமேம்பாடு