இன்றைய இளைஞர்களிடத்தில் காணப்படும் ஆக்கபூர்வமான விடயங்களோடு ஆற்றல், நிறமைகளை இணைத்து எதிர் மறை எண்ணங்களை மறைத்து, புதிய தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொள்வேன். வேலையற்ற இளைஞர், யுவதிகளுக்குத் தொழில்நுட்பக் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்களுக்கூடாக அவர்களின் திறனாற்றல் விருத்தியை ஏற்படுத்தி வேலைவாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுப்பேன். இதனால் அவர்கள் சிறந்த எதிர்காலத்தை நோக்கி வழிப்படுத்தப்படுவதுடன் குறிப்பாக போதையற்ற, வன்முறையற்ற இளம் சமுதாயம் மீளுருவாக்கம் செய்யப்படும். கிராமிய ரீதியில் மாதர் சங்கங்களுடன் இணைந்து பெண்களுக்கான சிறப்புக் குழுக்களை உருவாக்குவேன். தற்காலத்தில் பெண்களுக்கு பருஞ்சுமையாகக் காணப்படும் குடும்ப வன்முறைகள். தொழிலுக்கேற்ற ஊதியமின்மை, நுண்கடன் ர் பிரச்சினைகளுக்குத் தீர்வினைக் காணும் வழிமுறைகள் தொடர்பான பயிற்சிகளை வழங்கி, அவற்றிக்கான தீர்வைப் பெறக் கூடிய நிறுவன இணைப்புக்களும் ஏற்படுத்திக் கொடுப்பேன்.
கிராமிய ரீதியான விளையாட்டுக் கழகங்கள் வலுப்படுத்தப்படுவதுடன் சீரான கால இடைவெளிகளில் சந்திப்புகளை ஏற்படுத்தி குறைகளை நிவர்த்தி செய்வேன். விளையாட்டில் ஆர்வமான இளைஞர், யுவதிகளுக்காக அனைத்து வசதிகளுடனும் கூடிய சர்வதேச தர விளையாட்டு மைதானம், உள்ளக விளையாட்டு அரங்கினை அமைப்பதற்குப் பரிந்துரைப்பேன். கிரிக்கட் தைபந்தாட்ட தடகளப்போட்டிகளில் திறமையான வீரர்களுக்கு விசேட பயிற்சிகளை ஏற்பாடு செய்து பாழ், கிளிநொச்சி மாவட்டங்களை விளையாட்டில் தேசிய ரீதியில் முதலிடத்திற்குக் கொண்டு செல்ல டுபடுவேன். சிறந்தபயிற்றுவிப்பாளர்களை நியமிப்பதனூடாகத் திறமையான வீர, வீராங்கனைகளை லக அரங்கில் பிரகாசிக்க வைப்பதற்கான முயற்சிகளை ஆக்கப்பூர்வமாக முன்னெடுப்பேன்.
இளம் விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்ப விவசாயச் செய்கை தொடர்பான செயற்திட்டத்தை அறிமுகப்படுத்துவதுடன், புதிய தொழில்நுட்பக் கருவிகளை மானிய அடிப்படையில் பெற்றுக்கொள்ள வழிவகை செய்வேன். மேற்படி பொருத்தமான பொறிமுறைகள் மூலமாகக் கிராமங்களிலிருந்து நகரம் வரைக்கும் சாதிக்கத்துடிக்கும் இளையோர்களையும், மகளிர்களையும் இனங்கண்டு உலகுக்கு அறிமுகம் செய்வேன்.
- மகளிர்வலுவூட்டல்
- இளையோரின்திறனாற்றல்அபிவிருத்தி
- விளையாட்டில்முதலிடம்
- இளம்விவசாயிகளைஉருவாக்கல்
- இளம்தொழில்முயற்சியாளர்களின்தேடல்