தமிழர்களை உள்ளடக்கிய ஆட்சியொன்றினூடாக அரசியல் யாப்பு சீரதிருத்தத்தின் மூலம் அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற தமிழ் மக்களின் நீண்ட கால விருப்பத்தை நான் நன்கு அறிவேன். எனது விருப்பமும் இதுவே. எமது மக்களின் இந்த விருப்பத்தினைக் கடந்த காலங்களில் சுதந்திரக் கட்சியின் ஆட்சியாளர்கள் பலரிடமும் நான் எடுத்துக்கூறி இருக்கிறேன். அரசியல் கைதிகளின் விடுதலை குறித்தும் நான் ஜனாதிபதியுடன் ஏற்கனவே பேசியுள்ளேன். அவரும் மிகுந்த கரிசனை கொண்டிருக்கிறார். அவர்களின் விடுதலை தொடர்பில் நான் தொடர்ந்தும் ஜனாதிபதிக்கு என்னாலான காத்திரமான அழுத்தங்களைப் பிரயோகிப்பேன்.
யுத்தத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் பலவருடங்களாக வீதியில் நின்று போராடுவதைப் பல தடவைகள் உன்னிப்பாக அவதானித்துள்ளேன்.அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய சாத்தியமான நடவடிக்கைளை எடுப்பதற்கு நான் என்னால் முடிந்தளவுக்கு முயற்சிகளை மேற்கொள்வேன். விரைவில் அவர்களுக்கான தீர்வுகள் கிடைத்து இயல்பு வாழ்க்கைக்கு அவர்கள் விரைவில் திரும்ப வேண்டும் என்பதே எனது விருப்பம். மேலும் முப்படையினரினால் கையகப்படுத்தப்பட்டிருக்கும் அரச, தனியார் காணிகளை ஒரு பொறிமுறைக்கு அமைவாக விடுவித்து அம்மக்களை தமது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்துவேன்.
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளுக்கான பாதுகாப்பு. வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து கடந்த காலங்களில் நான் முக்கிய கவனம் செலுத்தியிருக்கின்றேன்.
இலங்கையில் யுத்தம் முடிவடைந்து ஒரு தசாப்தம் முடிந்த நிலையிலும் முன்னாள் போராளிகள் பலர் வாழ்வாதாரத்தை முன்னெடுப்பதற்கும் நாளாந்த ஜீவனோபாயத்திற்கும் சிரமப்படுவதையும் நான் நன்கறிவேன். அவர்களில் நிரந்தர வாழ்வாதாரமற்ற முன்னாள் போராளிகளை அடையாளப்படுத்தி அவர்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதற்காகத் தகுதியான தொழில்வாய்ப்பு அல்லது சுய தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க வழிசமைப்பேன்.
யுத்தத்தில் அங்கவீனமான முன்னாள் போராளிகள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள். மாற்றுத்திறனாளிகளின் விபரங்களை ஒன்று திரட்டி விசேட பொறிமுறையை உருவாக்குவதனூடாக அவர்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பேன்.
- தமிழர்களைஉள்ளடக்கியசெயற்திறன்மிக்கஆட்சி
- அரசியல்யாப்புசீரதிருத்தம்
- காணிவிடுவிப்பும், மீள்குடியேற்றமும்
- தமிழ்அரசியல்கைதிகளின்விடுதலை
- முன்னாள்போராளிகளின்வாழ்வியல்மேம்பாடு
- வலிந்துகாணாமலாக்கப்பட்டகுடும்பங்களுடன்கைகோர்த்தல்
- பெண்தலைமைத்துவக்குடும்பங்கள். மாற்றுதிறனாளிகளின்மறுவாழ்வு