10 அம்சக் கொள்கைத் திட்டங்கள்
- Home |
- 10 அம்சக் கொள்கைத் திட்டங்கள்
அரசியல் தீர்விற்கான ஆணித்தரமான அழுத்தம்
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி, அரசியல் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு, வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் சர்வதேச விசாரணை ஆகியவற்றுக்காக அரசியல் அழுத்தங்களை செயல் படுத்துதல்.
மேலும்
மீண்டும் கல்வியில் முதலிடம்
கல்வி தரத்தை உயர்த்த, கற்றல் உபகரணங்கள், இலவச காலை உணவு திட்டம், சர்வதேச தரத்தில் தொழிற்சார் கல்வி அறிமுகம், மற்றும் மாணவர்களுக்கு தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சிகளை வழங்குதல்.
மேலும்
துரித பொருளாதார வளர்ச்சி
"Make in Jaffna" திட்டத்தின் கீழ், உள்நாட்டு உற்பத்தி, சிறு மற்றும் நடுத்தர வியாபாரங்களை ஊக்குவிக்க மற்றும் புதிய முதலீடுகளைச் செயல்படுத்துதல்.
மேலும்
விவசாயம், மீன்பிடி, கால்நடைத் துறைகளில் துரித மீளெழுச்சி
நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விவசாயத்தை தொழில்மயமாக்கி, உணவுப் பாதுகாப்பு மற்றும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கைகள்.
மேலும்
மொழி, கலை, கலாச்சார, பண்பாட்டு, இலக்கியப் புத்தாக்கம்
தமிழ் மொழியின் அரச அலுவலகங்களில் பயன்பாட்டை உறுதிப்படுத்தி, பாரம்பரிய கலைகள் மற்றும் தொல்பொருள் வரலாற்றை காக்கும் திட்டங்களை முன்னெடுப்பது.
மேலும்
அனைத்து தமிழ் உறவுகளையும் ஒரே புள்ளியில் இணைத்தல்
புலம்பெயர் தமிழர்களின் சமூக மற்றும் பொருளாதார ஆதரவுகளை இணைத்து, தொழில் வாய்ப்புகளை வழங்கும் "உலகத் தமிழர் – உறவுப்பாலம்" திட்டம்.
மேலும்
உடல் உள நலன்மிக்க ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கல்
உடற்பயிற்சி நிலையங்கள், டெங்கு ஒழிப்பு, சித்த ஆயுர்வேத மருத்துவ வசதிகள், மற்றும் கோவிட் 19 அப்பாலான மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள்.
மேலும்
தொழில்நுட்பத்தை மையப்படுத்திய சமூகமொன்றைக் கட்டியெழுப்புதல்
"Digital-Yarl" திட்டத்தின் கீழ், எல்லா அரசாங்க அலுவலகங்களிலும் இலத்திரனியல் சேவைகள், இலத்திரனியல் கட்டணம், மற்றும் வேலைவாய்ப்பு தரவுத்தளம் ஆகியவற்றை உருவாக்குதல்.
மேலும்
அறிவுபூர்வ சக்திமிக்க மகளிர் மற்றும் இளைஞர்களின் எதிர்காலம்
தொழிற்பயிற்சி, விளையாட்டு, மற்றும் தொழில் முனைவோர்களுக்கு முன்னுரிமை கொடுப்பது, இளைஞர்களின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை மேம்படுத்துதல்.
மேலும்
இயற்கை, பௌதீக ஆளணி வளங்களை மேம்படுத்தல்
நீர், மின்சாரம், வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கிராமங்களுக்கு கொண்டு சென்று, சூழலியல் சுற்றுலாத்துறையினை வளர்த்தல்.
மேலும்