யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை முன்னிலைப்படுத்தும் எம் கனவு, வளர்ச்சியின் ஒளியில் தமிழர் பெருமையை பறைசாற்றும் ஒரு பயணம். எம் மண்ணின் வளங்களை முறையாக பயன்படுத்தி, தமிழர்களின் வாழ்வாதாரத்தையும் கலாச்சாரத்தையும் உயர்த்தி நின்றிட நாங்கள் முனைந்துள்ளோம்.
80 Temple Road, Nallur, Jaffna, Srilanka.
தமிழ் மக்கள் இலங்கைத் தீவின் சுதேச குடிமக்கள். அவர்கள் வடக்கு கிழக்கில் தனியான தாயகம், மொழி, பண்பாடு, கலாச்சார வரலாற்றைக் கொண்ட தேசிய இனம் என்பதை ஏற்றுக்கொண்டு சுதந்திரம் பெற்ற நாள் முதல் அடக்குமுறைகளுக்கு எதிராகவும், தமது சுயநிர்ணய உரிமைகளைப் பெறுவதற்காகவும் தமிழ் மக்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் நியாயமானது என்பதை அங்கீகரித்து ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டு 10 வருடங்கள் கடந்த பின்னரும் தமிழ் மக்களுக்கு எதிராக பாகுபாடுகள், அநீதிகள் தொடர்கின்றன என்பதையும் அவர்கள் தொடர்ந்தும் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர் என்பதையும் கவனத்தில் கொண்டு இறுதி யுத்தத்தில் நடந்தவை பற்றி பொறுப்புக்கூறல் பொறிமுறை ஒன்றினூடாக நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட்டு நிலையான சமாதானம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற தமிழ் மக்களின் வலியுறுத்தல்களைப் புரிந்துகொண்டு எந்தச் சந்தர்ப்பத்திலும் தமிழ் மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்துக்கு எதிராகவோ அல்லது அதனை கொச்சைப்படுத்தும் வகையிலோ செயற்படவில்லை என்பதையும் எதிர்காலத்திலும் அவ்வாறு செயற்படமாட்டேன் என்றும் உறுதி கூறிக்கொண்டு உரிமைகளுக்கான போராட்டத்துக்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்த அத்தனை உறவுகளையும் மிகுந்த மரியாதையுடனும் பயபக்தியுடனும் நினைவுகூர்ந்து, தமிழ் மக்கள் தாம் விரும்பும் அரசியல் தீர்வு ஒன்றினை பெற்றுக்கொள்வதற்கு மேற்கொள்ளும் ஜனநாயக ரீதியான அத்தனை முயற்சிகளுக்கும் பக்கபலமாகவும், அனுசரணையாகவும் செயற்படுவேன் என்று உறுதி கூறி அரசியல் தீர்வுக்கான முயற்சிகள் ஒருபுறம் நடைபெற எமது மக்களை பொருளாதார, சமூக மற்றும் கலாசார ரீதியாக வலுவூட்டுவது மிக மிக அவசியம் என்பதையும், இதன்பொருட்டு தமிழ் மக்கள் மிகவும் சாணக்கியமான முறையில் அரசாங்கங்களைப் பயன்படுத்தி செயற்படவேண்டும் என்பதையும் வலியுறுத்தி சிறந்த உபாயங்களை வகுத்து துடிப்புடனும், அர்ப்பணிப்புடனும் செயற்படுவேன் என்று வாக்குறுதியளித்து, அடுத்த 5 வருடங்களில் யாழ், கிளிநொச்சி மாவட்டங்களை முதல்நிலை மாவட்டங்களாக்கும் “என் கனவு யாழ்” என்ற நடைமுறைச் சாத்தியமான செயல்திட்ட வரைவினை உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன்.
அரசியல் தீர்விற்கான ஆணித்தரமான அழுத்தம்
மீண்டும் கல்வியில் முதலிடம்
துரித பொருளாதார வளர்ச்சி
விவசாயம், மீன்பிடி, கால்நடைத் துறைகளில் துரித மீளெழுச்சி
மொழி, கலை, கலாச்சார, பண்பாட்டு, இலக்கியப் புத்தாக்கம்
அனைத்து தமிழ் உறவுகளையும் ஒரே புள்ளியில் இணைத்தல்
உடல் உள நலன்மிக்க ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கல்
தொழில்நுட்பத்தை மையப்படுத்திய சமூகமொன்றைக் கட்டியெழுப்புதல்
அறிவுபூர்வ சக்திமிக்க மகளிர் மற்றும் இளைஞர்களின் எதிர்காலம்
இயற்கை, பௌதீக ஆளணி வளங்களை மேம்படுத்தல்
என் கனவு யாழ் – இது யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் மீளெழுச்சி மற்றும் மக்களின் முன்னேற்றத்துக்கான பூர்வகாலமான ஒரு திட்டம். உங்கள் பங்களிப்பும் முக்கியமானது.
யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை முன்னிலைப்படுத்தும் எம் கனவு, வளர்ச்சியின் ஒளியில் தமிழர் பெருமையை பறைசாற்றும் ஒரு பயணம். எம் மண்ணின் வளங்களை முறையாக பயன்படுத்தி, தமிழர்களின் வாழ்வாதாரத்தையும் கலாச்சாரத்தையும் உயர்த்தி நின்றிட நாங்கள் முனைந்துள்ளோம்.
அடுத்த 5 வருடங்களில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை அபிவிருத்தியின் தலைநகராக மாற்றுதல்.
No – 80, Temple Road, Nallur, Jaffna, Srilanka.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி
Copyright – All Rights Reserved By EnKanavuYarl